விமானப் போக்குவரத்தை மேலும் குறைக்கும் WIDERØE!

  • Post author:
You are currently viewing விமானப் போக்குவரத்தை மேலும் குறைக்கும் WIDERØE!

Widerøe விமான நிறுவனம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்பட்ட 4000 விமான போக்குவரத்து குறைப்புக்களை தொடர்ந்து, மே 31 வரை கூடுதலாக மேலும் 1,500 விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக விமானச் சீட்டு முன்பதிவுகள் குறைந்துள்ளமை மற்றும் வரையறுக்கப்பட்ட பயண நடவடிக்கைகள் போன்றவை காரணமாக இந்த போக்குவரத்து சேவை குறைப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல் செலவினங்களைக் குறைக்க பணிநீக்கம் மற்றும் முதலீடுகள் ஒத்திவைப்பு போன்ற உள்ளக நடவடிக்கைகளையும் விமான நிறுவனம் எடுத்துள்ளது (NTB).

பகிர்ந்துகொள்ள