விராட் கோலி மிக வேகமாக 1,000 ஓட்டங்கள் எடுத்து சாதனை!

  • Post author:
You are currently viewing விராட் கோலி மிக வேகமாக 1,000 ஓட்டங்கள்  எடுத்து சாதனை!

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று 20 பந்துபரிமாற்ற போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்தியா ஏழு இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் கோலி இறுதிவரை நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களை குவித்தார்.

இப்போட்டியில் அவர் தனது 22-வது ஒட்டத்தை எட்டிய போது சர்வதேச 20 பந்துபரிமாற்ற துடுப்பாட்டத்தில் அணித்தலைவராக மிக வேகமாக 1,000 ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டோனிக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினையும் அவர் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

பகிர்ந்துகொள்ள