வெளிவந்தது புதிய சட்டம் : நாய்கள் இனி, பண்ணை விலங்குகள் அல்ல!

  • Post author:
You are currently viewing வெளிவந்தது புதிய சட்டம் : நாய்கள் இனி, பண்ணை விலங்குகள் அல்ல!

சீனாவில் நாய்களை வீட்டு விலங்குகளாக வகைப்படுத்த வேண்டும், பண்ணை விலங்குகளாக அல்ல என்ற ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் சீனா அதிகாரிகள். இந்த முடிவு, சீனாவில் நாய்கள் பண்ணை விலங்குகள் போல் விற்பனை செய்யப்படுவது முடிவுக்கு வரவுள்ளதை குறிக்கின்றது.

சீன வேளாண் அமைச்சகம் எந்த விலங்குகள் பண்ணை விலங்குகளாக பயன்படுத்த ஏற்றது என்பதைக் காட்ட புதிய வரைவு பட்டியலை வெளியிட்டுள்ளது என்று CNN எழுதியுள்ளது.

உதாரணமாக, இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பண்ணை விலங்குகளின் பட்டியலில் பன்றிகள், மாடுகள், கோழிகள் மற்றும் ஆடுகள் அடங்கும். மேலதிகமாக, மான், கம்பளி ஆடு மற்றும் தீக்கோழி ஆகியவையும் இதில் அடங்கும்.

வெளிவந்தது புதிய சட்டம் : நாய்கள் இனி, பண்ணை விலங்குகள் அல்ல! 1

நாய்கள் மற்றும் பூனைகள் இந்த பட்டியலில் இல்லை. அதாவது, இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருமிடத்து, நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடுவதற்கு தேசிய தடை வரக்கூடும் என்று CNN எழுதியுள்ளது.

“மனிதரிடையே வளர்ச்சி மற்றும் விலங்கு நலனில் அக்கறை அதிகரித்து வருவதால், நாய்கள் பாரம்பரிய பண்ணைப் பிராணிகளில் இருந்து செல்லப்பிராணிகளாக மாறிவிட்டன” என்று அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாக CNN எழுதியுள்ளது.

மேலதிக தகவல்: TV2

பகிர்ந்துகொள்ள