வெள்ளைமாளிகை முற்றுகை ; பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்!

  • Post author:
You are currently viewing வெள்ளைமாளிகை முற்றுகை ; பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்!

அமெரிக்காவின் Minneapolis நகரில் கருப்பினத்தவரான George Floyd போலீஸ் அதிகாரியால் கொலை செய்யபட்டதன் எதிரொலியாக, பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களில் ஆர்ப்பாட்டம் பரவியுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி டிரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் டிரம்ப் பாராட்டி இருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே கூடியிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார் என CNN மற்றும் New York Timesசெய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை செப்டம்பர் 11, 2001 இன் பின்னர் இதுவே முதல் தடவையாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பரவலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மோதல்களால் 60 க்கும் மேற்பட்ட ரகசிய சேவை முகவர்கள் காயமடைந்துள்ளனர் என்று ரகசிய சேவை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள