ஸ்பெயின் : அரச குடும்பத்தில் முதல் கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing ஸ்பெயின் : அரச குடும்பத்தில் முதல் கொரோனா மரணம்!

ஸ்பெயினின் மன்னர் Felipe அவர்களின் உறவினர்களில் ஒருவரான இளவரசி Maria Teresa (86) வைரஸ் தொற்றினால் இறந்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள அரச மாளிகைகள் கொரோனா நிலைமையை எவ்வாறு கையாளுகின்றன என்பது குறித்து பல செய்திகள் சமீபத்திய வாரங்களில் வெளியாகியுள்ளன. நோர்வே அரச மாளிகையில் தற்போது எவரும் பாதிக்கப்படவில்லை. ஆரோக்கியமாக இருக்க தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும், மொனாக்கோ மற்றும் பிரித்தானிய நிலைமை வேறுபட்டது. Fyrst Albert (62) மற்றும் இளவரசர் Charles (71) இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சோதனைகளில் தெரியவந்தது. தற்போது அவர்கள் தனிமையில் உள்ளனர்.

இப்போது இந்த வைரஸ் ஸ்பெயின் அரச குடும்பத்தில் சிலரையும் பாதித்துள்ளது. ஸ்பெயினின் மன்னர் Felipe அவர்களின் நெருங்கிய உறவினரான இளவரசி Maria Teresa (86) இப்போது வைரஸ் தொற்றினால் இறந்துவிட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள