1.5. மில்லியன் பிரித்தானியர்களை எச்சரிக்கும் பிரித்தானிய அரசு! “கொரோனா” அதிர்வுகள்!!

1.5. மில்லியன் பிரித்தானியர்களை எச்சரிக்கும் பிரித்தானிய அரசு! “கொரோனா” அதிர்வுகள்!!

இலகுவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய ஆபத்திலிருக்கும் 1.5 மில்லியன் பிரித்தானியர்களை ஆகக்குறைந்ததது மூன்று மாதங்களுக்காவது தனிமையில் அவதானமாக இருக்கும்படி பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், “லூகேமியா” போன்ற நோய்களை கொண்டிருப்போர், சுவாசாம் சம்பந்தப்பட்ட நோய்களை கொண்டிருப்போர் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டோர் போன்ற வரையறைக்குள் வருபவர்களுக்கே, நாட்டின் தேசிய சுகாதார அமைப்பான NHS எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவில் இதுவரை 5018 பேர் “கொரோனா” வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், 240 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் முன்வைக்கப்படவுள்ள விசேட அவசரகால சட்டமூலம் நிறைவேற்றப்படும் நிலையில், “கொரோனா” பரவலை தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்படுமென தெரிவித்திருக்கும் இலண்டன் நகர முதல்வர் “சாதிக் கான்”, தேவையேற்படின் இலண்டன் நகரத்தில் விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்த்துறை நடவடிக்கை எடுக்கவேண்டியும் நேரலாமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த