1.8 மில்லியன் பெறுமதியான கஞ்சா பறிமுதல்!

1.8 மில்லியன் பெறுமதியான கஞ்சா பறிமுதல்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 1.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொதிகளை கடத்தி செல்லமுயன்ற இரண்டு சந்தேக நபர்களை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – தெமட்டகொடவுக்கு கடத்த முயன்ற சந்தேகநபர்கள் இருவரையும் விஷேட அதிரடிப்படையினரால் நேற்று (05) ஈரப்பெரியகுளம் குருந்துபிட்டியா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்
கெப்பத்திகொல்லாவ விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் காரினுள் பொதிசெய்து வைத்திருந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா ஈரப்பெரியகுளம் காவல்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள