10 வயது சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரித்த தந்தை!

You are currently viewing 10 வயது சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரித்த தந்தை!

நெல்லை– நவ19: பத்து வயது பெண் குழந்தையை, தந்தை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். 

இவர் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர்.

காவல்கிணறு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், அந்தோணி ராஜ் மற்றும் சுஜா வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் குழந்தை அப்பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுமி மகேஸ்வரி வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என்று ஆத்திர மடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் அலறித் துடித்த மகேஸ்வரி, தன்னை காப்பாற்றும்படி தந்தை அந்தோணி ராஜை கட்டி பிடித்துள்ளார். இதனிடையே சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணகுடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வயது சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments