10.000 பணியாளர்களை இடைநிறுத்தம் “SAS” விமானசேவை நிறுவனம்!

You are currently viewing 10.000 பணியாளர்களை இடைநிறுத்தம் “SAS” விமானசேவை நிறுவனம்!

“Scandinavian Airlines System” எனப்படும் “SAS” விமானசேவை நிறுவனம், தனது 10.000 பணியாளர்களை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

டென்மார்க், சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளின் கூட்டு நிறுவனமான இவ்விமானசேவை நிறுவனம், “கொரோனா” பரவல் காரணமாக பறப்புக்களை மேற்கொள்ள முடியாதிருப்பதாகவும், அதனால் வருமானம் இல்லாத நிலையில், பணியாளர்களை தொடர்ந்தும் வேலைத்தளங்களில் வைத்திருப்பதில் பயனேதுமில்லையெனவும், இதனாலேயே தனது 10.000 பணியாளர்களை 16.03.2020 முதல் இடைநிறுத்தம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தனது 90 சதவிகிதமான பணியாளர்களை இந்நிறுவனம் இடைநிறுத்தம் செய்வது குறிப்பிடத்தக்கது. எனினும், தனது விமானசேவையை முன்கூட்டியே பதிவு செய்திருந்த பயணிகளை மீண்டும் சொந்த நாடுகளுக்கு அழைத்துவரும் சேவையை தொடர்ந்து செய்யுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 10.000 பணியாளர்களும் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்திருக்கும் நிறுவனத்தின் இயக்குனர், மிக இக்கட்டான நிலையில் நிறுவனம் இருப்பதாகவும், எனினும் நிரந்தர வேலையிழப்புகளை தமது நிறுவன பணியாளர்கள் சந்திக்காதவண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

https://e24.no/naeringsliv/i/2Ge0pR/sas-permitterer-opptil-10000-ansatte?utm_source=kopierlink&utm_content=deleknapp&utm_campaign=bunn

பகிர்ந்துகொள்ள