1000 வருடங்களாக உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்துச்சீறும் ஆபத்து! பேரழிவை சந்திக்கும் அபாயத்தில் ஐஸ்லாந்து!!

You are currently viewing 1000 வருடங்களாக உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்துச்சீறும் ஆபத்து! பேரழிவை சந்திக்கும் அபாயத்தில் ஐஸ்லாந்து!!

ஜஸ்லாந்தில் சுமார் 1000 வருடங்களாக உறக்கநிலையில் இருந்த எரிமலையொன்று வெடித்துஎரிமலைக்குழம்பை கக்கும் அறிகுறிகள் தென்படுவதாக ஐஸ்லாந்து நாட்டின் காலநிலை அவதானநிலையம் அறிவித்துள்ளது.

“Thorbjarnerfell” என அழைக்கப்படும் குறித்த மலைப்பகுதிஐஸ்லாந்தின் பிரதானவிமானநிலையம் அமைந்துள்ள  “Feklavik” என்ற இடத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால்இம்மலை வெடித்து கிளம்பினால்ஐஸ்லாந்துக்கான விமான சேவைகள் பாதிக்கப்படுவதோடுஎரிமலையிலிருந்து கிளம்பக்கூடிய சாம்பல் புகை மூட்டத்தினால் ஐரோப்பா எங்கும்விமானப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுமெனவும் அஞ்சப்படுகிறது.

தவிரவும்எரிமலைக்குழம்புகளில் இருக்கக்கூடிய கனிமங்கள் கலந்த நீரை கொண்டுஅமைக்கப்பட்டஉலகப்புகழ் பெற்ற “Blue Lagoon” என்றழைக்கப்படும் நீர்நிலையும் இந்தமலைக்கு மிக அருகிலேயே இருக்கிறது

இயற்கையாகவே கனிமங்களை கொண்டிருக்கும் இந்த வெந்நீர் நீர்நிலையில் நீராடுவது தேகஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதால் வருடந்தோறும் பல இலட்சம் உல்லாசப்பயணிகள்இங்கு வந்து போகிறார்கள்.

எரிமலை வெடித்து சிதறும் பட்சத்தில்இந்த புகழ்பெற்ற நீர்திலையும் கடுமையானபாதிப்புக்களுக்குள்ளாகலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

வெடித்துச்சீறுவதற்கு தயாராகும் இம்மலை அமைந்துள்ள மிரதேசத்தை அண்டி மக்கள் அதிகமாகவாழும் நகரங்கள் அமைந்திருப்பதால் அவையும் பாதிப்புக்களை சந்திக்கலாமென்ற அச்சத்தினால்மக்களை எச்சரிக்கும் விழிப்புணர்வு சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருவதோடுவிமானநிலையத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 1200 ஆம் ஆண்டில் எரிமலைக்குழம்பை கக்கிய இந்த “Thorbjarnerfell” மலைகடந்த1000 வருடங்களுக்கு மேலாக அமைதியாக இருந்ததுஎனினும்தற்போது இம்மலையிலிருந்துஎரிமலைக்குழம்பு மீண்டும்  வெளிவருவதற்கான அறிகுறிகள் இம்மலையடிவாரத்தில்அவதானிக்கப்படுவதாகவும்இந்த அறிகுறிகள் வேகமாக உயர்நிலைக்கு செல்வதாகவும்தெரிவிக்கப்படுகிறது.

எரிமலைக்குமுறலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும்ஆரம்ப அறிகுறிகளோடு எரிமலைசிலவேளைகளில் அடங்கிப்போகலாம் என்றும்அதேவேளைஆரம்ப அறிகுறிகள் பல வாரங்கள்மாதங்களை கடந்தும் வருடக்கணக்கில் தொடரலாம் எனவும்எரிமலை வெடிக்காமலும்போகலாமெனவும் எதிர்வுகள் கூறப்படுகின்றன.

கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச்சிதறியதால் ஐஸ்லாந்தில்மட்டுமல்லாமல்ஐரோப்பாவெங்கும் விமானப்போக்குவரத்துக்கள் பெரும் பாதிப்புக்களுக்குஉள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

கடலுக்கடில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பிலிருத்து வெளிக்கிளம்பிய எரிமலைக்குழம்பு கடலிலேயேஇறுகியதால் ஏற்பட்ட நிலப்பரப்பு போன்ற திடலில் உருவானதாக சொல்லப்படும் ஐஸ்லாந்துநோர்வேயை சேர்ந்த “வைக்கிங்ஸ் / Vikings” எனப்படும் நாடுகாண் கடலோடிகளாலேயே முதன்முதலில் அவதானிக்கப்பட்டது.

எரிமலைக்குழம்பின் எச்சங்களின்மேல் உருவான நாடு என்பதால்பச்சைத்தாவரங்கள் மிகஅரிதாகவே ஐஸ்லாந்தில் காணப்படுகின்றனஎரிமலைக்குழம்பின் இறுகிய எச்சங்கள்நாடெங்கிலும் மலைகள் போல் குவிந்து கிடக்கின்றன.

தற்சார்பு பொருளாதாரத்திற்கான மூலதனங்கள் எதையுமே கொண்டிராத ஐஸ்லாந்துக்குஉல்லாசப்பயணிகளின் வருகை மிக முக்கியமானது

பூமிக்கடியிலிருந்து வானத்தை நோக்கி சீறிப்பாயும் சுடுநீர்ச்சிதறல் ஐஸ்லாந்தின் முக்கியஅடையாளமாக திகழ்கிறதுசுமார் 80 பாகை வெப்பநிலையுடன் கூடிய கொதிநிலையுடன்பூமிக்கடியிலிருந்து வான் நோக்கி 100 மீட்டர் உயரத்திற்கு சீறிப்பாயும் “Hot Spring” எனப்படும்இந்த வெந்நீர்ச்சிதறல்களை காண ஆண்டுதோறும் உல்லாசப்பயணிகள் இங்குபடையெடுக்கிறார்கள்.

இது தவிரவும்இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு நீர்வீழ்ச்சிகளும்ஆறுகளும்ஐஸ்லாந்துகடற்பரப்பில் வாழும் திமிங்கிலங்களும் உல்லாசப்பயணிகளை ஐஸ்லாந்துக்குகவர்ந்திழுக்கின்றன.

“Thorbjarnerfell” எனப்படும் இம்மலையிலிருத்து எரிமலைக்குழம்பு வெளிவரும் பட்சத்தில்எரிமலைக்குழம்பின் பரவல் பெரும் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் என்றும்இதனால் ஐஸ்லாத்தின்மிக முக்கியமான பகுதிகளின் போக்குகுவரத்து கட்டமைப்புகளும்மின்விநியோககட்டமைப்புக்களும் பாதிக்கப்படுவதோடுவிமானப்போக்குவரத்துக்களும் முற்றாக தடைப்படும்என்றும்ஐஸ்லாந்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதோடுஐரோப்பாவின்பெரும்பாகங்கறுக்கும் இதன் பாதிப்பு உணரப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

எரிமலையின் பாதிப்பிலிருத்து மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடுகளை ஐஸ்லாந்து அரசு விரைவாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள