12 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த முல்லைத்தீவு இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!

12 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த முல்லைத்தீவு இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!

12 வயது பாடசாலை மாணவியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மீட்டியகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் (4) இடம்பெற்றது.

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணியாற்றும் மனோஜ் நிஷாந்த என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.

12 வயது சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு சென்றபோது, சிப்பாயால் கடத்தப்பட்டு அருகிலுள்ள வீடொன்றில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின்படி, நேற்று முன்தினம் சிப்பாய் கைது செய்யப்பட்டார். நேற்று பலபிட்டிய பதில் நீதவான் துலுஷன் வதுதந்திரி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்…see more

பகிர்ந்துகொள்ள