120 ஆண்டு வரலாற்றில் 2019/2020 பனிக்காலம் வெப்பநிலையில் சாதனை!

  • Post author:
You are currently viewing 120 ஆண்டு வரலாற்றில் 2019/2020 பனிக்காலம் வெப்பநிலையில் சாதனை!

120 ஆண்டுகளுக்கு முன்பு, அளவீடுகள் தொடங்கியதிலிருந்து நோர்வேயில் 2019/2020 பனிக்காலம்தான் வெப்பமானதாக அளவிடப்பட்டுள்ளது.

இம்முறை பனிக்காலம் இயல்பைவிட 4.5 பாகை வெப்பமாக இருப்பதால், இதுவே 1900 ஆம் ஆண்டில் வானிலை ஆய்வு நிறுவனம் அளவீடுகளைத் தொடங்கியதிலிருந்து மிதமான பனிக்காலம் என கணிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு நிறுவனத்தின் செய்தி வெளியீட்டின்படி, வடக்கு நோர்வேக்கு வெளியே உள்ள அனைத்து பகுதிகளும் வெப்பமான பனிக்கால சாதனையை படைத்துள்ளன.

120 ஆண்டு வரலாற்றில் 2019/2020 பனிக்காலம் வெப்பநிலையில் சாதனை! 1

கிழக்கு நோர்வேயில் (Østlandet) இது1961-1990 காலப்பகுதியில் இருந்த சாதாரண வெப்பநிலையை விட 5.7 பாகை வெப்பமாக இருந்துள்ளது.
ஆக்டரில் (Agder), வெப்பநிலை இயல்பை விட 5.1 பாகை வெப்பமாகவும், மேற்கு நோர்வேயில் (Vestlandet) வெப்பநிலை இயல்பை விட 3.9 பாகை வெப்பமாகவும் இருந்துள்ளது.
அதேபோல் Trøndelag பகுதியில் வெப்பநிலை இயல்பை விட 4.8 பாகை வெப்பமாகவும் இருந்துள்ளது.
இந்த பருவகாலத்தில் மிக உயர்ந்த வெப்பநிலை 19 பாகை ஆகும், இது ஜனவரி 2 ஆம் தேதி Møre og Romsdal பகுதியில் உள்ள Sunndalsøra எனும் இடத்தில் அளவிடப்பட்டது. இதுவே ஜனவரி மாதத்தில் நோர்வேயில் பதிவான அதிகூடிய வெப்பநிலையாக உள்ளது.

பகிர்ந்துகொள்ள