13 ஐ தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்கவும் தயாரில்லை!

You are currently viewing 13 ஐ தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்கவும் தயாரில்லை!

ஒற்றையாட்சியின் 13வது திருத்தத்தினை ஒரு தீர்வாக எற்கவோ தீர்வுடைய ஆரம்ப புள்ளியாக கருதுவதற்கு தயாராக இல்லை என நாடாளுமன்ற மன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கறுப்பு தின போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றையதினமானது வேடிக்கையான விடயம். சிங்கள தேசத்தில் தங்களுடைய மக்களே ஒரு கரிநாள் அனுஷ்டிக்கின்ற நிலையிலே தங்களாலே நிராகிக்கப்பட்ட தலைவர் ஜனாதிபதி என பதவியினை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டி போட்டு வெல்லமுடியாத நிலையில் உள்ளார். பொருளாதார ரீதியாக நாடு அழிந்து போனநிலையில் அந்த பதவியை வைத்து தனக்கொரு கொண்டாட்டத்தினை நடாத்துவதற்கு இன்றைக்கு பல நிகழ்வினை செய்துகொண்டு யிருக்கின்றார்.

உலகத்திற்கு சொல்லுகின்ற செய்தி, இந்த சுதந்திர தினத்தினை நடாத்தாமல் விட்டால் உலகம் பார்த்து சிரிக்கும் இன்றைக்கு பார்த்து சிரிக்கபோவது தேசத்துடைய சிங்கள மக்களுடைய தலைவர் கொண்டக்கூடிய நிலையினை நிராகரித்து அதனைப் பார்த்து நிலத்தில் பார்த்து துப்பிக்கொண்டு இருக்கின்ற நிலையை பார்த்து தான் உலகம் சிரிக்கும் என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ளுவார்.

உண்மையான உரிமை, விடுதலையை செயற்படுவதற்கு உறுதியான கோணத்திலே முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும்

சிங்கள தரப்புக்கள் கூறுவது போல தமிழர்களின் அபிலாசைகளுக்கு தமிழ்தேசம் எந்தொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சி 13வது திருத்தத்தினை ஒரு தீர்வாக எற்கவோ, தீர்வுடைய ஆரம்ப புள்ளியாக கருதுவதற்கு தயாராக இல்லை. இது இன்றைய கிளர்ச்சியின் வாயிலாக எடுத்து கூறப்படுகின்றது – என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments