13 ஐ நடைமுறைப்படுத்த ரணிலுக்கு மக்களாணை கிடையாது!

You are currently viewing 13 ஐ நடைமுறைப்படுத்த ரணிலுக்கு மக்களாணை கிடையாது!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களாணை கிடையாதுஎன தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் மல்வத்து,அஸ்கிரி,ஸ்ரீ லங்கா ராமான்ய நிகாய,ஸ்ரீ லங்கா அமரபுர உட்பட மகாசங்கத்தினரிடம் வலியுறுத்தியுள்ளது.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.13 ஆவது திருத்தத்தை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்கள் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சூடான் நாட்டுக்கு ஏற்பட்ட கதியே இலங்கைக்கும் ஏற்படும்.நாட்டு மக்கள் இன ரீதியில் முரண்பட்டுக் கொள்வார்கள்.

நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு மகாசங்கத்தினருக்கு உண்டு.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வீண் பிரச்சினைகளை தோற்றுவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பினால் பெரும்பாலான மக்கள் பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

அரசியல் கட்சிகள் தேர்தல் ஊடாக அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் செயற்படுகிறதே தவிர அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கவனம் செலுத்துவதில்லை.மக்களாணை இல்லாத நிலையில் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுப்படுத்தாத சமஷ்டி இலக்கை நிறைப்படுத்த தற்போதைய நெருக்கடியான சூழலை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.

சமஷ்டி ஆட்சி இலக்கை இந்த முறை உறுதியாக செயற்படுத்த ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதை அவரது பேச்சு மற்றும் செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் அழுத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியான பொருளாதார சூழலை பிரிவினைவாத அமைப்புக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளன.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு என்ற ரீதியில் வெறுப்பு நிலையை அடைந்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் செயற்படுத்திக் கொள்ள முடியும். நாட்டை சமஷ்டி அடிப்படையில் பிளவுப்படுத்தும் வகையில் 2000 ஆம் ஆண்டு அரசியல் திருத்த யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments