14, அகவை சிறுமி கொரோனாவுக்கு பலி!!

You are currently viewing 14, அகவை சிறுமி கொரோனாவுக்கு பலி!!

50m 100m 200m ஆகிய நீச்சலில் பங்கெடுத்துவரும் 14 அகவையுடைய பிரேசிலை சேர்ந்த பெண்பிள்ளையொன்று கொரோனாவால் இறந்த துயரசம்பவமொன்று பிரேசில் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

இச்செய்திபற்றி மேலும் தெரியவருவதாவது

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று உறுதியாக்கப்பட்டு வீட்டில் 1 மாதம் ஒய்வெடுத்தபின்னர் மீண்டும் நீச்சல் போட்டிகளில் பங்கெடுத்ததை தொடர்ந்து மீண்டும் கொரோனாவுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பரிசோதித்தபோது தொண்டைப்புண் சரியாக மாறதநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்பு சுவாசப்பையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

சிலநாட்களின் பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மீண்டும் சுவாசத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இரண்டுநாட்கள் கழித்து கடந்த டிசம்பர்19 ஆம் திகதி இறந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள