14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

14 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

தலைமன்னார் கிராம பகுதியில் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

இக்கைது நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தலைமன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தலைமன்னார் கிராமம் பகுதியில்   14 கிலோ 170 கிராம் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த கேரள கஞ்சா பொதிகளை  தம்வசம் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுகளில் தலைமன்னார் கிராமத்தின் சிலுவை நகரைச் சேர்ந்த 21, 49 வயதுடைய இரு சந்தேகநபர்களை கைது  செய்துள்ளதாக, மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments