14 ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்!!

14 ம் நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்!!

14 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று 17/09/2020 சுவிசு நாட்டினை பி.ப 4 மணிக்கு வந்தடையும்.

நேற்று 16/09/2020 14நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடங்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் fergersheim மாநகரசபை முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அரசியல் சந்திப்புக்களாக Sélestat, Colmar மாநகரசபைகளின் நகரபிதாவினை சந்தித்து எமக்கிழைக்கப்ட்ட அநீதிக்கு 72 வருட காலமாக சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடரும் வன்முறைகள், இனவழிப்பு மற்றும் தமிழீழ தேசத்தின் தற்கால நிலையும் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பிரான்சுவெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு தமிழர்களின் நியாயமான வேண்டுகோளை எடுத்துச்செல்வதாக நம்பிக்கை வாக்குறுதிகள் தரப்பட்டன.

அதை தொடர்ந்து Mulhouse நோக்கி பிரான்சுகாவல்துறையின் பாதுகாப்புடன் தொடங்கிய மனித நேய ஈருருளிப்பயணம் நேற்றயதினம் battenheim என்ற இடத்தில் நிறைவிற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று காலை France Mulhouse மாநகர சபையில் எமக்கான நீதியின் குரலினை மாநகர முதல்வரிடம் பதிவு செய்து தொடர்ச்சியாக, Saint Louis மாநகர சபையில் எமது தமிழீழ மக்களின் இனவழிப்பிற்கான நீதியினை கேட்டு,அனைத்துல சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மனுகையளிக்கப்பட்டு,

அதனைத்தொடர்ந்து எம் இலக்கிற்கான பயணம் Basel மாநகரத்தினை ஊடறுத்து எம் இலக்கினை நோக்கி தொடரும்.

« தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் »

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments