ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 146 வருடங்களாக இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த பனிப்புயலை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
வினாடிக்கு 82 கிலோமீட்டர் எனும் அதிவேகத்தில் பனிப்புயல் வீசுவதால் அப் பகுதியிலுள்ள மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளமையால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பனியை அகற்றும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றது.






