15 வயது சிறுமிபாலியல் துஷ்பிரயோகம்!

You are currently viewing 15 வயது சிறுமிபாலியல் துஷ்பிரயோகம்!

 

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன 24) கைது செய்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை 18 வயது இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதனையடுத்து தலைமறைவாகிய இளைஞனை சிறீலங்கா காவற்துறை தேடிவந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழ இரவு குறித்த இளைஞனை கைது செய்ததுடன் இவரை இன்று (ஜன 25)  புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments