பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 கால்நடைகள் உயிரிழப்பு!

பரந்தன் வீதியில் டிப்பர் மோதி 18 கால்நடைகள் உயிரிழப்பு!

பரந்தன் வெலிக்கண்டல் சந்தியில் டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழந்திருக்கின்றன. இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளி விட்டு 

குறித்த டிப்பர் வாகனம் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக இதனை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை 

பயிர்ச்செய்கைக்கு உட்படாத பகுதியான வெலிக்கண்டல் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு விபத்து இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக கேட்டுவரும் நிலையில், 

குறித்த விடயம் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. என்பதுடன் கட்டாக்காலிகளாக விடப்படும் கால்நடைகளின் 

உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னராவது கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என பொறுப்புவாய்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments