மன்னாரில் இளம் பெண் சடலமாக மீட்பு!

மன்னாரில் இளம் பெண் சடலமாக மீட்பு!

மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி  பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை(13)  மதியம் நீரில் மிதந்த நிலையில் காவல்த்துறையால்  மீட்கப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி  பாத்தியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது

குறித்த நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதோடு, பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்படதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவரி பாதணி , உட்பட சில தடையப் பொருட்களையும், சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் சடலப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments