4 கால்கள் 4 கைகள் அதிசயக்குழந்தை!!

4 கால்கள் 4 கைகள் அதிசயக்குழந்தை!!

நான்கு கால்கள், நான்கு கைகள், ஒரு தலையுடன் மிகவும் வினோதமாக பிறந்துள்ள ஆண் குழந்தையால் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் சுஷாந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

வயிற்றில் இருந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டபோது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. ஆம், சுஷாந்திக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளின் தலை, முகம், மூக்கு அனைத்தும் ஒன்றாக இருந்தநிலையில் உடல் பாம்புபோல பின்னி பிணைந்துள்ளது. மேலும் குழந்தைக்கு நான்கு கால்கள், நான்கு கைகள் இருந்துள்ளது.

இந்த அதிசய குழந்தையை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதேநேரம் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தமிழகத்தில் வேலை பார்த்துவந்த இவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக இங்கேயே தங்கிவிட்டநிலையில் அவர்களுக்கு தற்போது அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments