184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர் -மனித உரிமைகள் அமைப்பு!

184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர் -மனித உரிமைகள் அமைப்பு!

சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு மட்டும் 184 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர் என்று மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ரிப்ரீவ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட்டினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ரிப் ரீவ் தெரிவித்துள்ளது.

இதில் உச்சகட்டமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் நாள் ஒரே நாளில் 37 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்றும் அதில் 3 பேர் சிறுவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகம் என்றும் ரிப்ரீவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!