19வது நாளாக தொடரும் நீதிக்கான போராட்டம்!!

19வது நாளாக தொடரும் நீதிக்கான போராட்டம்!!
19வது நாளாக தொடரும் நீதிக்கான போராட்டம்!! 1

19ம் நாளாக (26.02.2021) ஐ.நா முன்றலில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி 5ம் நாளாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

அன்பிற்கினிய எம் தமிழ் உறவுகளே , எமக்கான ஒரே தீர்வாகிய தமிழீழத்தின் விடியலினை நாம் அண்மித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் வாழுகின்ற நாடுகளினை எமது நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வைப்பது வரலாற்றுத்தேவையாகும். எனவே தொடர்ச்சியாக 22வது தடவையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவழிப்போராட்டமானது கடந்த 08.02.2021 திகதி ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் 1500 Km கடந்து 21.02.2021 அன்று ஐ.நா முன்றலை வந்தடைந்தது. தொடர்ந்தும் 01.03.2021 வரை எமது தாய்நிலத்தின் விடுதலை வேண்டியும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் உணவுத்தவிர்பு போராட்டமாக தொடர்கின்றது.

எதிர்வரும் 01.03.2021 (திங்கள்) திகதி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தமிழ் உறவுகளை கலந்து கொண்டு உங்கள் வரலாற்று கடமையாற்ற வாருங்கள் என அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

பகிர்ந்துகொள்ள