19 ஆவது ஆண்டு நிறைவில் பொங்கு தமிழ் பிரகடனம்!

19 ஆவது ஆண்டு நிறைவில் பொங்கு தமிழ் பிரகடனம்!

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ம் ஆண்டு நிறைவு நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று இடம்பெற்றது.

2001ஆம் ஆண்டு இதே நாளில், யாழ். பல்கலைக்கழக முன்றிலில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்த பிரகடனத்தின் 19வது ஆண்டு நிறைவு நாளான இன்று அந்த பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டுமென மாணவர்களால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக துறைசார் தரப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of