20 அகவை இளைஞன் பலி!

20 அகவை இளைஞன் பலி!

கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில், விசுவமடு பகுதியை சேர்ந்த குணராஜா ஜெனோயன் (20 வயது)  என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்துடன், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கனரக இயந்திரத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள