20 அகவை யுவதி கொரோனாவால் பலி!

20 அகவை யுவதி கொரோனாவால் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதியொருவர் நேற்றிரவு(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

பதுளை – ரிதிமாலியத்தை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 20 வயதான யுவதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,  காகொல்லை கொரோனாசி கிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை

20 வயது யுவதி உள்ளிட்ட மேலும் எட்டுப் பேர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள