20 அமெரிக்க இராணுவ தளங்களை சேதப்படுத்திய ஈரான்!

You are currently viewing 20 அமெரிக்க இராணுவ தளங்களை சேதப்படுத்திய ஈரான்!

போர் தொடங்கியதிலிருந்து 20 அமெரிக்க இராணுவ தளங்கள் மீதி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. பிபிசி வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களின் ஆய்வின்படி, ஈரான் கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள 20 அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஈராக், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய எட்டு நாடுகளில் உள்ள முக்கிய தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில், பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ரேடார், எரிபொருள் விமானங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

அமெரிக்கா “Operation Epic Fury” என்ற நடவடிக்கையின் கீழ் ஈரானில் 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக Pentagon தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் தாக்குதல்கள் மிகவும் துல்லியமாகவும் விரிவாகவும் நடந்துள்ளதாக பிபிசி வெரிஃபை ஆய்வு காட்டுகிறது.

செயற்கைக்கோள் படங்களில், சவுதி அரேபியாவின் Prince Sultan விமான தளத்தில் கண்காணிப்பு விமானங்கள் சேதமடைந்ததும், குவைத்தில் Camp Arifjan-இல் எரிபொருள் சேமிப்பு மற்றும் தொடர்பு அமைப்புகள் அழிந்ததும் தெளிவாக தெரிகிறது.

Pentagon மதிப்பீட்டின்படி, இந்த போரின் செலவு 29 பில்லியன் டொலர் வரை சென்றுள்ளது. அதில் பெரும்பாலானது சேதமடைந்த உபகரணங்களை பழுது பார்க்கவும் மாற்றவும் செலவிடப்படுகிறது.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, “மத்திய கிழக்கு இனி அமெரிக்க தளங்களுக்கு பாதுகாப்பான இடமல்ல” என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கபட்டுள்ளதால், சமாதான ஒப்பந்தம் மீண்டும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply