20 கோடியை நெருக்கும் கொரோனா தொற்று; 42 இலட்சத்து 40 ஆயிரம் பேரை பலியெடுத்தது!

You are currently viewing 20 கோடியை நெருக்கும் கொரோனா தொற்று; 42 இலட்சத்து 40 ஆயிரம் பேரை பலியெடுத்தது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியை நெருங்கி வருகிறது. அதேநேரம் உலகம் முழுவதும் கொரானா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தொகையும் 42 இலட்சத்து 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று வரையான தரவுகளின் பிரகாரம் உலகம் முழுவதும் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 19 கோடியே 90 இலட்சத்து 8 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களில் 17 கோடியே 96 இலட்சத்து 16 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான 1 கோடியே 51 இலட்சத்து 40 ஆயிரம் வரையானோர் தற்போது உலகெங்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

ஆபத்தான டெல்டா உரு திரிபு வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் அண்மைக் காலங்களில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வருகின்றது.

தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையைத் தகர்த்து தொற்று நோயாளர் தொகையும் இறப்புக்களும் உலகெங்கும் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில் உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் 40 இலட்சம் தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலாவை டெல்டா உரு திரிபு வைரஸூடன் தொடர்புடயவை எனவும் அவா் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய போக்கு தொடர்ந்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உலகில் மொத்த தொற்று நோயாளர் தொகை 20 கோடியைக் கடந்து அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

தொற்று நோயால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அங்கு இதுவரை 3,57,68,924 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,29,380 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக தடுப்பூசி வீதங்களைக் கொண்டுள்ளபோதும் அமெரிக்காவில் மீண்டும் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் கடந்த சில தினங்களாக பதிவாகி வருகின்றனர்.

இந்தியா பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,16,95,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,24,808 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு இன்றுவரை 1,99,38,358 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், 5,56,886 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் 30 இலட்சத்துக்கு மேற்பட்ட தொற்று நோயாளர்கள் உறுதி செய்யப்பட்ட நாடுகள் மற்றும் அங்கு பதிவான கொரோனா மரணங்களின் தொகை வருமாறு,

ரஷ்யா – பாதிப்பு – 62,88,677, உயிரிழப்பு – 1,59,352,

பிரான்ஸ் – பாதிப்பு – 61,46,619, உயிரிழப்பு – 1,11,885,

இங்கிலாந்து – பாதிப்பு – 58,80,667, உயிரிழப்பு-129,719,

துருக்கி – பாதிப்பு – 57,47,935 – உயிரிழப்பு – 51,428,

ஆர்ஜெண்டினா- பாதிப்பு – 49,35,847 – உயிரிழப்பு – 105,772,

கொலம்பியா – பாதிப்பு – 47,94,414 – உயிரிழப்பு – 120,998,

ஸ்பெயின் – பாதிப்பு – 44,47,044 – உயிரிழப்பு – 81,486,

இத்தாலி – பாதிப்பு – 43,55,348 – உயிரிழப்பு – 128,068,

ஈரான் – பாதிப்பு – 39,03,519 – உயிரிழப்பு – 90,996,

ஜேர்மனி – பாதிப்பு – 37,78,276 – உயிரிழப்பு – 92,172,

இந்தோனேசியா- பாதிப்பு – 34,40,396 – உயிரிழப்பு – 95,723

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments