20 வருடங்களில் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து இன்று முற்றாக வெளியேறியது அமெரிக்கா!

You are currently viewing 20 வருடங்களில் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து இன்று முற்றாக வெளியேறியது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் இன்று செவ்வாய்க்கிழமை அங்கிருந்து முற்றாக வெளியேறின.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்கப் படைகளில் இறுதி விமானம் காபூல் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

ஒப்பந்தத்தின் பிரகாரம் ஆகஸ்ட் 31 -ஆம் திகதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் படைகளும் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரித்திருந்த நிலையில் அவசர அவசரமாக மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு அமெரிக்கா முழுமையாக இன்று ஆப்கானில் இருந்து வெளியேறியது.

இதன்மூலம் ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு மேலாக நீடித்த அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் 82 -ஆவது விமானப்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹூ, ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சி -17 விமானத்தில் ஏறினார். இதன் மூலம் மேஜர் ஜெனரல் டோனாஹூவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் இறுதி அமெரிக்க இராணுவ உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார். இத்துடன், ஆப்கானில் அமெரிக்காவின் அனைத்துப் பணிகளும் முடிவுக்கு வந்தன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் சுமார் 123,000 பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக தாங்கள் வெளியேற்றியுள்ளதாக மீட்புப் பணிகளுக்கு தலைமைதாங்கிய அமெரிக்க இராணுவ ஜெனரல் பிராங்க் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் இந்தப் பணிக்காக அமெரிக்கா அதிக விலை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உட்பட 170 பேர் கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments