கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்த முயன்ற சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கனேடியப் பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(26.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த மேற்படி சந்தேகநபரின் நடத்தை மற்றும் பயணப் பொதிகள் மீது சந்தேகமுற்ற விமான நிலைய சுங்க அதிகாரிகள், அவரது உடைமைகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.









