21அகவை இளைஞன் திடீர் மரணம்!

21அகவை இளைஞன் திடீர் மரணம்!

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞர் 21 ஆவது வயதில் இன்று 11.11.2020 புதன்கிழமை காலமானார்.


18.05.1999 இல் பிறந்த இவர் வயாவிளான் மத்திய கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு உயர்தர தொழிநுட்ப பிரிவு மாணவராவார்.
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.


புன்னாலைக்கட்டுவன் தெற்கில் (ஆயக்கடவை பிள்ளையாருக்கு முன்னுள்ள வீதி, பாடசாலைக்கு அருகாமை வீதி) உள்ள அன்னாரின் வீட்டில் நாளை 12.11.2020 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று நண்பகல் 12 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் இந்துமயானத்திற்கு பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.


இவரது தந்தையார் லோகேஸ்வரன் (லோகன்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர செயற்பாட்டாளராவர்.
இளைஞனின் மரணம் புன்னாலைக்கட்டுவனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments