21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்வு!

Default_featured_image

கடந்த வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் 21 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 5.00 மணி முதல் தளர்த்தப்படுகிறது.

இந்த மாவட்டங்களில், மீண்டும் நாளை திங்கட் கிழமை (4) முதல் புதன் கிழமை (6) வரை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

புதன் கிழமை இரவு 8.00 மணிக்கு அமுலாகும் ஊரடங்கானது எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

அதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

பகிர்ந்துகொள்ள