பிரபல ஊடகவியலாளர் “அப்துல் ஜப்பார்” காலமானார்!

பிரபல ஊடகவியலாளர் “அப்துல் ஜப்பார்” காலமானார்!

தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் “அப்துல் ஜப்பார்” இன்று 22.12.2020 காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

“சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்” என்றழைக்கப்படும் இவர், 26.06.1939 ஆம் ஆண்டில் பிறந்திருந்தார். தனது வாழ்வின் பெரும்பகுதியை எழுத்து, ஊடகத்துறை, ஒலிபரப்புத்துறை, விளையாட்டு (துடுப்பாட்டம்) வர்ணனனை போன்ற துறைகளிலேயே செலவிட்டிருந்தார்.

ஆரம்ப காலங்களில் “இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணியாற்றிய இவர், பிற்காலங்களில் பல்வேறு ஐரோப்பிய ஊடங்கங்களில் செய்தியாளராகவும், வர்ணனையாளராகவும் விளக்கியிருந்தார்.

இலங்கை, கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட சர்வதேச செய்தியாளர் சந்திப்புக்கு செய்தியாளராக சென்றிருந்த இவர், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், தலைவர் அவர்களை தனிமையில் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் பெற்றிருந்தார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுடனான சந்திப்பு பற்றி, “அழைத்தார் பிரபாகரன்” என்ற நூலில் விபரமாக அப்துல் ஜப்பார் அவர்கள் விபரித்துள்ளார்.

அன்னாருக்கு “தமிழ்முரசம்” வானொலியியும் தனது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments