22 ஆவது திருத்தத்துக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் 6 பேர் ஆதரவு! – சுமந்திரன் பங்கேற்கவில்லை

You are currently viewing 22 ஆவது திருத்தத்துக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் 6 பேர் ஆதரவு! – சுமந்திரன்  பங்கேற்கவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் 178 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களில் 6 பேரே பங்கேற்றனர்.

வாக்கெடுப்பில் கலந்துகொண்ட சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் ஆகியோர் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இரா. சாணக்கியன் எம்.பி. வெளிநாடு சென்ற காரணத்தால் சபைக்கு வரவில்லை.

அதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், எஸ்.வினோநோகராதலிங்கம் எம்.பியும் சுகயீனம் காரணமாக சபைக்கு வரவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments