220 மில்லியன் ரூபா பெறுமதியான 17 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது!

220 மில்லியன் ரூபா பெறுமதியான 17 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 220 மில்லியன் ரூபா மதிப்புள்ள 17 கிலோகிராம் தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைத்துக்குள் இருந்து தங்கத்தை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது இந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டார்.

டுபாயில் இருந்து கடத்திவரப்பட்ட இந்தத் தங்கத்தை வெளியே கொண்டுவந்து சோ்ப்பதற்காக இனந்தெரியாதவர்களால் இந்த தொழிலாளியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்த விசாரணைகளை சுங்கத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments