24மணிநேரத்துக்குள் அமேரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

24மணிநேரத்துக்குள் அமேரிக்காவில் கொரோனா தடுப்பூசி!

அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட தொலைக்காட்சி உரையில், “அமெரிக்காவில் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த எப்.டி.ஏ அனுமதி அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும். மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும்” என தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள