24 மணிநேரத்தில் 1480 அமெரிக்கர்கள் மரணம்! “கொரோனா” அதிர்வுகள்!!

24 மணிநேரத்தில் 1480 அமெரிக்கர்கள் மரணம்! “கொரோனா” அதிர்வுகள்!!

அமெரிக்காவில் 24 மணிநேரத்திற்குள்ளாக 1480 பேர் “கொரோனா” வுக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

03.04.2020 அன்றைய கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த “கொரோனா” மரணங்கள், “கொரோனா” பரவலின் பின்னதாக உலகளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள அதியுயர் மரண கணக்கெடுப்பாகும். குறிப்பாக நியூயோர்க் நகரில் மட்டும் 3000 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டு, இரட்டைக்கோபுர தாக்குதல்களில் பலியானவர்களின் தொகைக்கு சமானமான இழப்புக்கள் இவையென “New York Times” பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை நியூரோர்க் நகரில் மாத்திரம் ஒரே நாளில் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் புதிதாக 10.000 இக்கும் மேற்பட்டவர்களுக்கு “கொரோனா” தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளதுடன், தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த தொகை 1.02.863 பேராக உயர்ந்துள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மாநிலத்திலுள்ள வைத்தியசாலைகளில் வைத்திய சேவையாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்திமகாலசேவை நிறுவனங்கள் உயிரற்ற உடலங்களை அடக்கம் செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் அதே வேளை, மாநிலத்திலுள்ள தனியார் வைத்தியசாலைகளிலும், மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருக்கும் செயற்கை சுவாசம் வழங்கும் இயந்திரங்களை மாநில நிர்வாகம் கையகப்படுத்துவதற்கான ஆணையில், நியூயோர்க் மாநகர ஆளுநர் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments