24 மணிநேரத்தில் 613 ரஷ்யர்கள் மரணம்! “கொரோனா” கொடுமை!!

24 மணிநேரத்தில் 613 ரஷ்யர்கள் மரணம்! “கொரோனா” கொடுமை!!

ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்துக்குள்ளாக 613 பேர் “கொரோனா” பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய ரீதியில், அதிகமான “கொரோனா” தொற்றாளர்களை கொண்ட நாடுகள் வரிசையில் 4 ஆவது இடத்திலிருக்கும் ரஷ்யாவில், மிக அதிகமானவர்கள் மரணமானது பதிவுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், மரணமானவர்களின் தொகை இன்னும் அதிகமாக இருக்கலாமென சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

“கொரோனா” தடுப்புமருந்தை சென்ற வாரத்தில் ரஷ்யா பாவனைக்கு எடுத்திருந்தாலும், குறித்த தடுப்பு மருந்து இறுதி செய்யப்பட்ட ஒன்றல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments