25 பில்லியன்களை விடுவிக்க கோரும் ஈரான்!

You are currently viewing 25 பில்லியன்களை விடுவிக்க கோரும் ஈரான்!
அமெரிக்கா தடுத்தது வைத்திருக்கும் ஈரானின் சுமார் 25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை, இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தைகளின் முக்கிய பகுதியாக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது பல ஆண்டுகளாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக, ஈரானின் வெளிநாட்டு நிதிச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்தத் தொகையை மீண்டும் பெற வேண்டும் என்பதே ஈரானின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மேலும், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவச் செயல்பாடுகளை குறைக்கவும், ஈரானுக்கு எதிரான சில தடைகளை நீக்கவும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
முன்பு கைதி பரிமாற்ற ஒப்பந்தங்களின் போது, அமெரிக்கா சில தொகைகளை விடுவித்திருந்தாலும், இந்த அளவிலான கோரிக்கை புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவகாரம், அணு ஆயுத திட்டம் தொடர்பான பதற்றம் மற்றும் மத்திய கிழக்கு அரசியல் நிலவரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பகிர்ந்துகொள்ள

Leave a Reply