27 வருடங்கள் உறைநிலையில் வைக்கப்பட்ட கரு, குழந்தையாகியது!

You are currently viewing 27 வருடங்கள் உறைநிலையில் வைக்கப்பட்ட கரு, குழந்தையாகியது!

27 வருடங்களாக உறைநிலையில் வைக்கப்பட்டிருந்த கரு, அமெரிக்காவில் குழந்தையாக பிறந்துள்ளது.

1992 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் தானமாக கொடுத்த கருமுட்டை உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனை “தத்து” எடுத்துக்கொண்ட அமெரிக்க தம்பதியினருக்கு இக்கருமுட்டை மூலமாக “Molly Gibson” என்ற பெண்குழந்தை ஒக்டோபர் மாத இறுதியில் பிறந்துள்ளது.

இதேவேளை, “Molly Gibson” என்ற இப்பெண்குழந்தையின் சகோதரியான “Emma Gibson” என்ற குழந்தையும், உறைநிலையில் வைக்கப்பட்ட கருமுட்டையின் மூலமே பிறந்திருந்தாள். எனினும், “Emma Gibson” பிறந்த கருமுட்டை 24 ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, தனது அக்காவின் உலகசாதனையை முறியடித்து, 27 வருடங்கள் உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தவள் என்ற உலகசாதனையை “Molly Gibson” பெற்றிருக்கிறாள் என தெரிவிக்கப்படுகிறது.

கருமுட்டை தானம் என்பது அமெரிக்காவில் சட்டபூர்வமானது என்பதால், தானமாக கொடுக்கப்படும் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாத்து வைத்து, தேவையானவர்களுக்கு அக்கருமுட்டைகளை வழங்கி அவற்றின்மூலம் குழந்தைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள