3வது ஒருநாள் துடுப்பாட்டம் : நியூசிலாந்து அணி வெற்றி!

3வது ஒருநாள் துடுப்பாட்டம் : நியூசிலாந்து அணி வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

விராட்கோலி தலைமையிலான இந்திய துடுப்பாட்ட அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 பந்து பரிமாற்ற போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியிருந்தது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 இலக்குகள் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி துடுப்பெடுத்தாடியது. ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரார் அகர்வால் 1 ஓட்டங்களிலும் , கோலி 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின் , ஸ்ரேயாஸ் ஐயர் – ராகுல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்திய அணி 50 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 296 ஓட்டங்கள் சேர்தது. அதிகபட்சமாக ராகுல் 112 ஓட்டங்களும் , ஸ்ரேயாஸ் 62 ஓட்டங்களும் அடித்தனர்.

தொடர்ந்து 50 பந்து பரிமாற்ற முடிவில் இந்திய அணி 7 இலக்குகள் இழப்பிற்கு 296 ஓட்டங்களை எடுத்து. இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணியில் பென்னட் 4 இலக்குகளையும், ஜாமிசன் மற்றும் நீஷம் தலா ஒரு இலக்கும் வீழ்த்தினர். பின்னர் 297 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.

முடிவில் 47.1 பந்து பரிமாற்றங்களில் 5 இலக்குகள் இழப்பிற்கு 300 ஓட்டங்களை அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என கைப்பற்றி இந்தியாவை தோற்கடித்துள்ளது நியூசிலாந்து. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியிருந்தது. தற்போது அதற்கு பழிப்பழி தீர்த்துள்ளது நியூசிலாந்து.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of