3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிப்பு!

3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும்,  கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலேயே டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த