32 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

32 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சீனா இப்போது மொத்தம் ஒன்பது நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று AFP அறிக்கை கூறுகின்றது.

அதாவது அண்ணளவாக 32 மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை ஷாங்காயில் டிஸ்னியில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா அதே காரணத்திற்காக தற்காலிகமாக மூடப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 26 பேர் இறந்துள்ளதாகவும், 830 பேரிற்கு தொற்று அறிகுறி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த