33 இலங்கை மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை!

33 இலங்கை மாணவர்களுக்கும்  கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை!

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 இலங்கை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்த  33  மாணவர்களை அழைத்து வந்த  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இலங்கைக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. அவர்களுக்கு ராணுவ முகாமில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருந்த போதிலும் 33 பேருக்கும் தொடர்ந்து 14 நாட்களுக்கு தினமும் 2 முறை மருத்துவ பரிசோதனை நடத்தவும், தனித்தனி அறைகளில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த