36 புதிய “கொரோனா” நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதி! மீண்டும் தலை தூக்கும் “கோவிட் – 19” வைரஸ்?

36 புதிய “கொரோனா” நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதி! மீண்டும் தலை தூக்கும் “கோவிட் – 19” வைரஸ்?

நோர்வேயில் “கோவிட் – 19” வைரஸின் தாக்கம் தொடர்ந்து அவதானிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் வெளிவந்துள்ள செய்திகளின்படி, தற்போதைய நிலவரப்படி 36 “கொரோனா” தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 8 பேர், அதிதீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயின் “மக்கள் சுகாதார மையம் / Norsk Folkehelseinstituttet” விடுத்துள்ள அறிக்கையின்படி, நோர்வேயில் இதுவரை 8401 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 236 பேர் இதுவரையிலும் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோர்வேயில் “கொரோனா” தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அரசு அறிவித்திருந்த நிலையில், முடக்க நிலையடைந்திருந்த தலைநகர் “ஒஸ்லோ / Oslo” மெல்லமெல்ல மீண்டும் வழமைக்கு திரும்பும் நிலையிலும், மூடப்பட்டிருந்த குழந்தைகள் காப்பகங்கள், பாடசாலைகள், உணவுவிடுதிகள், சிகையலங்கார நிலையங்கள் போன்றவை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் “கோவிட் – 19” வைரஸின் தாக்கம் தொடர்வது மீண்டும் சிக்கலான நிலைய ஏற்படுத்தலாமென மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments