4 மீட்டர் தூரம்வரை காற்றில் பயணிக்கும் “கொரோனா” வைரஸ்! புதிய ஆய்வில் தகவல்!!

4 மீட்டர் தூரம்வரை காற்றில் பயணிக்கும் “கொரோனா” வைரஸ்! புதிய ஆய்வில் தகவல்!!

சீன ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகளின்படி, “கொரோனா” வைரசுக்கள் சுமார் 4 மீட்டர்கள் தூரம்வரை காற்றில் பயணிக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் “Beijing / பெய்ஜிங்” நகரில், “Academy of Military Medical Sciences” நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் கூடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், நோயாளிகளின் தும்மல்கள், இருமல்களின்போது வெளிப்படும் வைரசுக்கள், சுமார் 4 மீட்டர்கள் வரை பயணப்பட்டதன் பின்னரேயே தரையை வந்தடைவதாகவும், அதேவேளையில், சிகிச்சைக்கூடங்களின் தரைகள், குப்பை வாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப்பணியாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், கதவு கைப்பிடிகள், கட்டில்கள், காலணிகள் போன்றவற்றிலும் வைரசுக்கள் அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஆய்வுகளின்படி பின்வரும் பிரதானமான 3 விடயங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்படவேண்டுமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

  • “கொரோனா” வைரஸ் காற்றில் பயணிக்கும் தூரமும், சாதாரண மேற்பரப்புக்களில் காணப்படும் விகிதமும் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், நோயாளிகளோடு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களுக்கும், நோயாளிகளை பராமரித்து சிகிச்சையளிக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தொற்று ஏற்படும் வாய்ப்புக்கள், முன்னதாக சொல்லப்பட்டதைவிடவும் அதிகமாக இருக்கின்றன…
  • சாதாரண வைத்தியசாலை பிரிவுகளை விடவும், “கொரோனா” நோயாளிகள் வைக்கப்படும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவுகளில் வைரஸின் பரவல் அதிகமாக இருக்குமென்பதால், அங்கு பணியாற்றுபவர்களின் பாதுகாப்பு இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது பிரதானமானது…
  • சுமார் 4 மீட்டர்கள்வரை காற்றில் “கொரோனா” வைரசுக்கள் பயணிக்குமென கண்டறியப்பட்டுள்ளதால், மனிதர்களுக்கிடையில் குறைந்தது 2 மீட்டர்கள் இடைவெளி இருக்கவேண்டுமென முன்னதாக விடுக்கப்பட்ட பரிந்துரைகள் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும்…  
4 மீட்டர் தூரம்வரை காற்றில் பயணிக்கும் "கொரோனா" வைரஸ்! புதிய ஆய்வில் தகவல்!! 1

இப்போது வெளிவந்திருக்கும் புதிய ஆய்வுகளின் முடிவுகளின்படி, தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்பு பரிந்துரைகள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் செய்யப்படவேண்டிய அதேவேளையில், தற்போது நடைமுறையிலிருக்கும் 2 மீட்டர்கள் இடைவெளி என்ற வரைமுறையை உடனடியான மாற்றங்களை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதனால் அதிக பாதகம் இருக்காதெனவும் நோர்வே சுகாதார அமைப்பு கருதுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள