44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

  • Post author:
You are currently viewing 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ததில் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள ஒரு குகையை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது குகையில் இருந்த சுண்ணாம்பு பாறைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பதை கண்டனர்.

ஆடு, மாடு, காட்டுப்பன்றி, மான் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் ஓவியங்கள் இருந்தன. சில ஓவியங்கள் விலங்குகளை வேட்டையாடுவது போல் வரையப்பட்டிருந்தன. அதில் வேட்டையாடும் நபர்கள் கைகளில் ஈட்டி மற்றும் கயிறுகளை வைத்திருப்பது தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.மேலும் அந்த ஓவியங்களில் மனிதர்களின் உருவம் சிறியதாகவும், விலங்குகளின் உருவம் பெரியதாகவும் இருக்கின்றன. இதன் மூலம் அந்த காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் ராட்சத அளவில் வளர்ந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவை 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தயவை என்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஓவியங்கள் எதை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளன என்பதை கண்டறியவில்லை எனவும், அது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள