5 நாட்களில் 1218 பேருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா!!

You are currently viewing 5 நாட்களில் 1218 பேருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில்  கொரோனா!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் இதன்போது தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 220 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களில் 220, 235, 342, 189, 232 என 1218 தொற்று நோயாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்திற்கு முன்னர் நூறுக்குட்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பேணுவதன் மூலமே இந்த பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் டாக்டர் நாகலிங்கம் மயூரன் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments