6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!

You are currently viewing 6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்!
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 1
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 2

6 வது நாளாக (13.02.2021) தொடரும் தமிழின அழிப்பிற்கான மனித நேய ஈருருளிப்பயணம் France நாட்டினை வந்தடைந்தது.

கடந்த 27.02.2021 அன்று தமிழினப்படுகொலையினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்னும் கருத்தினை ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையாளர் வெளியிட்டிருந்தார். அக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை எதிர்வரும் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழர்களுக்கு தமிழீழமே தான் தீர்வு என வலியுறுத்த வேண்டும் என 22 ஆவது தடவையாக தொடர்ந்தும் மனித நேய ஈருருளிப்பயணம் இலக்கு நோக்கி நகர்கின்றது. அந்தவகையிலே Luxembourg நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் , உச்ச நீதிமன்றத்தின் ஊடாக பிரான்சு நாட்டின் எல்லையினை இயற்கையின் பெரும் சவால்களுக்கு மத்தியில் வந்தடைந்தது.

6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 3
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 4

மீண்டும் நாளை எமது இலக்கினை அடைய இயற்கையும் மாவீரர்களும் துணை நிற்பர் எனும் நம்பிக்கையில் விடுதலை வேண்டி பயணிப்போம்.

6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 5
6வது நாளாக தொடரும் நீதிக்கான ஈருருளிப்பயணம்! 6

“மக்கட்புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

பகிர்ந்துகொள்ள